/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஹிந்து முன்னணி நிறுவனர் பிறந்த தின விழா
/
ஹிந்து முன்னணி நிறுவனர் பிறந்த தின விழா
ADDED : செப் 20, 2025 02:12 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த. மருதுார் டவுன் பஞ்., கணேசபுரம் கிராமத்தில் குளித்தலை ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில், அதன் நிறுவனர் மறைந்த ராமகோபாலனின், 98 வது பிறந்த தினம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம், அமைப்பு ஒன்றிய தலைவர் ராஜசேகர் தலைமையில் நடந்தது. ராமகோபாலன் திருவுருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்யப்பட்டது
.இந்நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட ஹிந்து முன்னணி தலைவர் கனகராஜ், கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி ஆகியோர், ராமகோபாலன் குறித்து பேசினர். தொடர்ந்து, ஹிந்து முன்னணி, திருச்சி ஐ பவுண்டேஷன் இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஒன்றிய செயலர்கள் கலியமூர்த்தி, நவீன், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், சிவபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.