/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
94,000 டாலரை தாண்டியது பிட்காயின் மதிப்பு
/
94,000 டாலரை தாண்டியது பிட்காயின் மதிப்பு
ADDED : நவ 21, 2024 06:42 AM
மும்பை: கடந்த வாரத்தில் 90,000 டாலரை முதல்முறையாக எட்டிய பிட்-காயின் மதிப்பு, நேற்று 94,000 டாலரைத் தாண்டி, இதுவரை இல்-லாத உச்சம் தொட்டது. இதனால், கிரிப்டோகரன்சி சந்தையின் மொத்த மதிப்பு, 250 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. அமெ-ரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதால், முன்னேற்றம் காணத் துவங்கிய கிரிப்டோகரன்சி சந்தை, அவரது அரசு அமைக்-கும் நடவடிக்கைகள் வேகம் பெற்று வரும் நிலையில், தொடர்ந்து உயர்வுப் பாதையிலேயே நீடிக்கிறது.
கிரிப்டோகரன்சி வணிகத்துக்கு, அமெரிக்க புதிய அரசு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையில், சந்தையில் உற்சாகம் நீடிக்கிறது. 'பக்த்' என்ற கிரிப்டோ நிறுவ-னத்தை, டிரம்பின் சமூக வலைதள நிறுவனமான 'ட்ரூத் சோஷி-யல்' வாங்க பேச்சு நடப்பதாக வெளியான தகவலும், கிரிப்டோக-ரன்சி வணிகத்தில் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

