/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.,: நடிகர் சரத்குமார் வேண்டுகோள்
/
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.,: நடிகர் சரத்குமார் வேண்டுகோள்
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.,: நடிகர் சரத்குமார் வேண்டுகோள்
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.,: நடிகர் சரத்குமார் வேண்டுகோள்
ADDED : ஏப் 16, 2024 06:57 AM
கரூர் : தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என, நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.
கரூர் வெங்கமேட்டில், கரூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, நடிகர் சரத்குமார் பேசியதாவது:
பிரதமர் மோடி, 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத தலைவராக ஆட்சி செய்துள்ளார். உலகில், 11வது இடத்தில் இருந்த பொருளாதாரத்தை, 5வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் பா.ஜ.,விற்கு எம்.பி., இல்லாத போது, இங்கு பல்வேறு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டு காஸ் இணைப்பு, குடிநீர் இணைப்பு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கியது பா.ஜ., ஆட்சியில் தான். மத்திய அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்து, மாநில அரசு இலவசமாக அரிசி வழங்குகிறது. அதனை தாங்கள் கொடுத்தோம் என, முதல்வர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஓட்டி கொண்டுள்ளார். மூன்றாவதாக முறையாக பிரதமராக மோடி வர உள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டணியில், யார் பிரதமர் என்று தெரியாமல் உள்ளது.
தமிழகத்தில் அமைச்சர்கள் எப்போது ஜெயிலுக்கு செல்வார்கள், வெளியில் இருப்பார்கள் என்று தெரியவில்லை. இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் ஆட்சியாக தமிழகத்தில் தி.மு.க., உள்ளது. அவர்களை மீட்க வேண்டும் என்றால், வலிமையான தலைவரின் கீழ், ஆட்சி நடக்க வேண்டும். அ.தி.மு.க., - தி.மு.க., என ஊழல் செய்யும் திராவிட காட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ., ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கு முன்னோட்டமாக இந்த தேர்தலில், பா.ஜ.,வை தேர்வு செய்ய வேண்டும். காஷ்மீரில், 370 சட்டம் ரத்து செய்யப்பட்ட பின், கல் ஏறிந்த கைகள் பூக்கள் வீசி கொண்டு இருக்கின்றன.இவ்வாறு, அவர் பேசினார்.

