/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் வாஜ்பாய் பிறந்தநாள் பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
/
கரூரில் வாஜ்பாய் பிறந்தநாள் பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
கரூரில் வாஜ்பாய் பிறந்தநாள் பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
கரூரில் வாஜ்பாய் பிறந்தநாள் பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
ADDED : டிச 26, 2024 01:44 AM
கரூர், டிச. 26-
கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானாவில், பா.ஜ., மத்திய மாநகரம் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 100வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்தது.
மத்திய நகர தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் கோபிநாத், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மாவட்ட துணைத் தலைவர் செல்வன், பிரசார அணி மாநில செயலர் ராஜேஷ், சிறுபான்மை அணி பிரிவு தலைவர் உசேன் பாய் உள்பட பங்கேற்றனர்.
* கரூரில் உள்ள பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தார். மாவட்ட பொதுச் செயலர்கள் ஆறுமுகம், சக்திவேல் முருகன், மாவட்ட செயலர் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணி, உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் ரகுபதி உள்பட பலர் பங்கேற்றனர்