/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ஜ., மாவட்ட தலைவர் தேர்தல் வாக்குவாதத்தால் நிறுத்தி வைப்பு
/
பா.ஜ., மாவட்ட தலைவர் தேர்தல் வாக்குவாதத்தால் நிறுத்தி வைப்பு
பா.ஜ., மாவட்ட தலைவர் தேர்தல் வாக்குவாதத்தால் நிறுத்தி வைப்பு
பா.ஜ., மாவட்ட தலைவர் தேர்தல் வாக்குவாதத்தால் நிறுத்தி வைப்பு
ADDED : ஜன 06, 2025 01:53 AM
கரூர்: தமிழகத்தில் பா.ஜ., அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. முதல்-கட்டமாக கிளை தலைவர்கள், மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், ஓட்டு எண்ணிக்கை அடிப்ப-டையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, கரூரில் உள்ள, பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், நேற்று மாவட்ட தலைவர் தேர்தல் நடந்தது. இதில், மாநில செயற்குழு உறுப்பினரான, மாவட்ட தேர்தல் அதிகாரி மணி முன்-னிலை வகித்தார்.
தற்போதைய மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாவட்ட துணைத்தலைவர் செல்வம், மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர் பிரபு உள்பட, 15 பேர் மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அப்போது, சில நிர்வாகிகள், 'தலைவர் பதவிக்கு போட்டியிட என்ன விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன' என கேள்வி எழுப்-பினர். அப்போது, '6 ஆண்டுகள் தீவிர உறுப்பினராக இருக்க வேண்டும்' உள்பட பல்வேறு விதிமுறைகள் பற்றி கூறினர். அப்-போது, 'போட்டியிடும் அனைவரும் விதிமுறைப்படி தகுதி பெற்-றுள்ளனரா?' என்று கேட்டனர். இந்த கேள்வி கேட்டவுடன், நிர்-வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, தேர்தல் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்-பட்டது.
இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி மணியிடம் கேட்ட-போது, ''இப்பிரச்னை உள்கட்சி விவகாரமாகும். சில நிர்வாக காரணங்களால், மாவட்ட தலைவர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்-டது. எந்தவிதமான பிரச்னைகளும் நடக்கவில்லை,'' என்றார்.