/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கவர்னர் இல.கணேசன் மறைவு கரூரில் பா.ஜ.,வினர் அஞ்சலி
/
கவர்னர் இல.கணேசன் மறைவு கரூரில் பா.ஜ.,வினர் அஞ்சலி
கவர்னர் இல.கணேசன் மறைவு கரூரில் பா.ஜ.,வினர் அஞ்சலி
கவர்னர் இல.கணேசன் மறைவு கரூரில் பா.ஜ.,வினர் அஞ்சலி
ADDED : ஆக 17, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மனோகரா கார்னரில், பா.ஜ., சார்பில் கவர்னர் இல.கணேசன் மறைவுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். '
பா.ஜ., முன்னாள் மாநில தலைவரும், நாகாலாந்து கவர்னருமான இல.கணேசன் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது திருவுருவப்படத்திற்கு கரூரில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச்செயலர்கள் சாமிதுரை, செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் முருகன், மாவட்ட செயலர்கள் முருகேசன், காவேரி மோகன்ராஜ், மத்திய மாநகர் தலைவர் சரண்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.