ADDED : பிப் 22, 2026 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி சார்பில், மாவட்ட தலைவர் பெருமாள் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும், போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்டு கொள்ளாத, தி.மு.க., அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டது.
மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் சக்திவேல் முருகன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

