sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் 1,061 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு

/

கரூரில் 1,061 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு

கரூரில் 1,061 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு

கரூரில் 1,061 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு


ADDED : பிப் 10, 2026 05:12 AM

Google News

ADDED : பிப் 10, 2026 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ''கரூர் மாநகராட்சியில், 1,061 துாய்மை பணியா-ளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும்,'' என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூரில், மாநகராட்சி, நகராட்சிகள், டவுன் பஞ்சா-யத்து துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்-தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 48 வார்டுகளில், 1,061 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கக்கூடிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு, 5.32 கோடி ரூபாய் மதிப்-பீட்டில் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு, உணவு வழங்கப்படுகிறது. இதில், பயனாளிகளுக்கு இரண்டு பை (டிபன் பாக்ஸ் அடங்கிய பை) தயார் செய்யப்பட்டு, ஒரு பை அவர்களிடத்திலே வழங்-கப்படும். உணவை எடுத்துக் கொண்ட பிறகு அந்த பையை திரும்ப ஒப்படைத்து, இரண்டாவது பையை அடுத்த நாள் பெற்றுக் கொள்ளலாம்.கரூர் மாநகராட்சி மட்டு மின்றி, 7 டவுன் பஞ்-சாயத்தில், 301 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 101 பேர், புகழூர் நகராட்சியில், 135 பேர், குளித்-தலை நகராட்சியில், 121 பேர் என மொத்தம், 1,719 துாய்மை பணியாளருக்கு காலை உணவு வழங்-கப்படுகிறது. இந்தியாவிலேயே, ஒரு மாநி-லத்தில் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கக்கூடிய திட்டம், செயல்படுத்தக்-கூடிய முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற பெரு-மையை, முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி உள்ளார்.

இவ்வாறு, அவர் கூறினார்.

விழாவில் மாநகராட்சி மேயர் கவிதா, மாநக-ராட்சி கமிஷனர் சுதா, துணை மேயர் தாரணி சரவணன், மண்டலக்குழு தலைவர்கள்

கனகராஜ், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us