sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆங்கிலேயர் போர் நினைவு சின்னம்; கலெக்டர் ஆய்வு

/

ஆங்கிலேயர் போர் நினைவு சின்னம்; கலெக்டர் ஆய்வு

ஆங்கிலேயர் போர் நினைவு சின்னம்; கலெக்டர் ஆய்வு

ஆங்கிலேயர் போர் நினைவு சின்னம்; கலெக்டர் ஆய்வு


ADDED : ஜூன் 28, 2024 01:13 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டம், தொல்லியல் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும், ராயனுார் ஆங்கிலேயர் போர் நினைவு சின்னம், தோகைமலை ஒன்றியம், செம்பரன்கல்லுப்பட்டியில் உள்ள இரும்பு கால நினைவு சின்னங்களை, கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:

கடந்த, 1780 முதல் 1784 வரை நடந்த இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர், ஒரு பகுதியாக கருவூரில் (கரூர்) நடந்தது. 1783 ஏப்ரல் மாதம் திப்பு சுல்தான் ஆளுகைக்குட்பட்டிருந்த கருவூர் கோட்டையை கைப்பற்றுவதற்காக, ஆங்கிலேயர், கருவூர் மீது போர் தொடுத்தனர். போரின் இறுதியில் கருவூர் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. அப்போரில் படைப்பிரிவு தலைவர் ஒருவரும், 19 ஜரோப்பியர்களும் கொல்லப்பட்டனர்.

கருவூர் கோட்டையை கைப்பற்றியதை நினைவு கூறும் வகையிலும், இறந்த போர் வீரர்களின் நினைவாகவும், அமராவதி ஆற்றின் தென்கரையில் ராயனுாரில் நினைவுத் துாண் எடுக்கப்பட்டுள்ளது. தோகைமலை ஒன்றியம், செம்பரன்கல்லுப்பட்டியில் உள்ள, கல்லாங்குத்து எனும் குன்றின் கீழ் மேற்கு திசையில், 4 ஏக்கர் பரப்பளவில் கல் - வட்டங்கள் காணப்படுகிறது. கல் வட்டத்தின் விட்டம், 10 அடியும், அவற்றின் நடுவே 2க்கு3 அடி, 3க்கு3 அடி கொண்ட செவ்வக வடிவில் செங்குத்தாக அமைக்கப் பெற்றுள்ளது.

புறம்போக்கு நிலத்தில் உள்ள கல் வட்டங்கள் தோண்டப்பட்டும், குன்றின் பாறைகள் உடைக்கப்பட்டும் சேதப்பட்டும் உள்ளது. பட்டா நிலத்தில் உள்ள கல் வட்டங்கள் வேளாண் பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது.

இதுபோன்ற, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமசின்னங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. இத்தகைய ஈமசின்னங்கள், அக்காலத்தைய மக்களின் பண்பாடு, கலாசாரம், இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் போன்றவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு கூறினார்.

ஆய்வின் போது, ஆர்.டி.ஓ., தனலட்சுமி, தொல்லியல் அலுவலர் நந்தகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us