/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உடைந்த குழாய், பழுதான போர்வெல்கள் கரூர் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்
/
உடைந்த குழாய், பழுதான போர்வெல்கள் கரூர் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்
உடைந்த குழாய், பழுதான போர்வெல்கள் கரூர் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்
உடைந்த குழாய், பழுதான போர்வெல்கள் கரூர் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்
ADDED : அக் 18, 2025 01:11 AM
கரூர், கரூர் மாநகராட்சி பகுதியில், பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர், சாக்கடை கால்வாய் மற்றும் சாலையில் செல்கிறது. போர்வெல் குழாய்கள், சின்டெக்ஸ் தொட்டிகள் சேதமடைந்துள்ளன.
கரூர் மாநகராட்சியில், கரூர், தான்தோன்றிமலை பழைய நகராட்சி பகுதிகளில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுகிறது. பழைய இனாம் கரூர் பகுதியில், குடிநீர் திட்டப்பணிகள் முழுமை அடையவில்லை. பழைய சணப்பிரட்டி பஞ்சாயத்தில், புதிய குடிநீர் திட்டப்பணிகள் இல்லை. பழைய திட்டமே செயல்பாட்டில் உள்ளது. மூன்று நாட்கள் முதல், ஐந்து நாட்களுக்கு, ஒருமுறை கரூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் குழாய்கள் உடைந்துள்ளன. இதனால், தண்ணீர் திறக்கப்படும் போது, குடிநீர் சாலை மற்றும் சாக்கடை கால்வாய்களில் செல்கிறது. அதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மேலும் மாநகராட்சியில் உள்ள, 48 வார்டுகளில் கடந்த, 2011-16 வரை, 100க்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைத்து, மின் மோட்டார் உதவியுடன் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.
தற்போது, பல இடங்களில் போர்வெல் குழாய் சேதமடைந்துள்ளது. சின்டெக்ஸ் தொட்டி உடைந்து, திருட்டு போயும் உள்ளது. பல இடங்களில் மின் மோட்டார்களை காணவில்லை. ஆனால் மாநகராட்சி ஆணையர், பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள், எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் மாநகராட்சி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
நடப்பாண்டு கடந்த இரண்டு மாதங்களாக ஓரளவுக்கு மழை பெய்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனவே, பழுதடைந்த போர்வெல்களை சீரமைத்து, புதிதாக சின்டெக்ஸ் தொட்டி வைக்க வேண்டும். மேலும், உடைந்த காவிரி குடிநீர் திட்ட குழாய்களையும் சரி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.