ADDED : அக் 18, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே, பைக் மீது வேன் மோதிய விபத்தில், வாலிபர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த, ராமசாமி என்பவரது மகன் மணிகண்டன், 27; இவர் நேற்று முன்தினம் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை செம்மடை சர்வீஸ் சாலையில், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார், 40; என்பவர் ஓட்டி சென்ற மேக்சி வேன், பைக் மீது மோதியது. அதில், கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்த மணிகண்டன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.