/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜவஹர் பஜார் சாலையில் உடைந்த தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டும்
/
ஜவஹர் பஜார் சாலையில் உடைந்த தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டும்
ஜவஹர் பஜார் சாலையில் உடைந்த தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டும்
ஜவஹர் பஜார் சாலையில் உடைந்த தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டும்
ADDED : அக் 11, 2025 12:42 AM
கரூர், கரூர் ஜவஹர் பஜார் சாலையில், உடைந்துள்ள தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டும்.
கரூர் நகரின் மைய பகுதியாக உள்ள ஜவஹர் பஜாரில், தலைமை தபால் நிலையம், தாலுகா அலுவலகம், கிளை சிறை, தீயணைப்பு நிலையம், ஜவுளி நிறுவனங்கள், ஜூவல்லரிகள் உள்ளன. இதனால், ஜவஹர் பஜாரில் வாகன நெரிசல் ஏற்படுவதுண்டு. விபத்துகளை தவிர்க்க ஜவஹர் பஜாரில் சில ஆண்டுகளுக்கு முன், சாலையின் நடுவே தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டன.
தற்போது, பல இடங்களில் தடுப்பு சுவர்கள் உடைந்துள்ளன. அதை சரி செய்யாமல், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் காலம் கடத்துகின்றனர். தடுப்பு சுவர்கள் முழுமையாக உடைந்து விடும் பட்சத்தில், வாகனங்கள் தாறுமாறாக செல்லும். அப்போது, விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தற்போதே உடைந்த தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டும்.