/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறப்பு கிராம சபை கூட்டம் குறித்து வாகன விழிப்புணர்வு
/
சிறப்பு கிராம சபை கூட்டம் குறித்து வாகன விழிப்புணர்வு
சிறப்பு கிராம சபை கூட்டம் குறித்து வாகன விழிப்புணர்வு
சிறப்பு கிராம சபை கூட்டம் குறித்து வாகன விழிப்புணர்வு
ADDED : அக் 11, 2025 12:41 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்சாயத்துகளில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடக்கவிருந்த கிராம சபை கூட்டம் இன்று நடக்கிறது. இது குறித்து, வாகனங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்சாயத்துகளில் உள்ள வயலுார், சிவாயம், பாப்பகாப்பட்டி, கருப்பத்துார், பிள்ளபாளையம், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, மகாதானபுரம், சேங்கல் உள்பட, 21 பஞ்சாயத்துகளில் அக்.,2 காந்திஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதற்கு பதிலாக இன்று காலை கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதற்கான வாகன விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது. மேலும் கிராம சபை கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம், கலந்து கொண்டு மக்களிடம் உரையாடல் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.