ADDED : ஜூன் 20, 2026 05:19 AM
மல்லசமுத்திரம்:நாமக்கல்
மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர், 25 வயது இளம்பெண்;
மனநலம் பாதித்த, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது தாய்,
தினமும் காலை, 9:00 மணிக்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டு, மாலை வீடு
திரும்புவார். இந்நிலையில், மாற்றுத்திறனாளி பெண், கடந்த, 10
நாட்களாக தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். உடல் நலம் பாதித்ததால்,
அவரது தாய், மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு,
கடந்த, 16ல் அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள்,
இளம்பெண் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனால்
அதிர்ச்சியடைந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் தாய், மல்லசமுத்திரம்
போலீசில் புகாரளித்தார். விசாரணையில், அதே பகுதியில் வசிக்கும்
தாயின் தங்கை மகன், இரண்டு மாதங்களாக இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு
செய்தது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி, மூன்று வயதில் ஒரு பெண்
குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. மல்லசமுத்திரம் போலீசார்,
அவரை கைது செய்தனர்.
