/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : நவ 22, 2024 01:40 AM
குண்டும், குழியுமான சாலை
வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
கரூர், நவ. 22-
வெங்கமேட்டில், பல தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்தில் செல்கின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேட்டில், பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. தெருக்களில் பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் குழாய்களுக்கு சீரமைப்பு உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. மேலும், பல பகுதிகளில், குடிநீர் குழாய் உடைந்து விடுகிறது. நகரில் பாதாள சாக்கடை குழாய்களில் அழுத்தம் காரணமாக, பல இடங்களில் பள்ளம் விழுகிறது. அதை சீரமைக்கவும் பள்ளம் தோண்டப்படுகிறது.
அந்த பணிகள் முடிந்த பிறகு, பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில், உடனடியாக சாலை அமைக்கப்படுவது இல்லை. முக்கிய தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இந்த பகுதியில், சரியான திட்டமிடல் இல்லாமல் புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை அமைக்கப்பட்டவுடன், பல்வேறு பணிகளுக்கு சாலையில் குழி தோண்டப்படுகிறது.
இவ்வாறு, சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். அவ்வப்போது, சிறிய விபத்துகளும் ஏற்படுகின்றன. சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.