/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டும் குழியுமான சாலை; வாகன ஓட்டிகள் அவதி
/
குண்டும் குழியுமான சாலை; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 05, 2024 12:55 AM
கரூர்: குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் தவித்து வரு-கின்றனர்.கரூர் நரிக்கட்டியூர் நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த சாலைகள் போட்டு பல ஆண்டுகளாகி விட்-டதால் சேதமடைந்துள்ளது. மழையால் சாலையில் அரிப்பு ஏற்-பட்டு மோசமான நிலையில் காணப்படுகிறது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சாலையில் செல்லும் போது, மிகவும் அவ-திப்படுகின்றனர். அலுவலகம் செல்லும் ஊழியர்கள், சரியான நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் நிலை தடுமாறி விழுகின்றனர். அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் கூட பயணிக்க முடியாத நிலையில் சாலை உள்ளது. சாலையை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.