/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் மீது கார் மோதி பஸ் டிரைவர் பலி
/
பைக் மீது கார் மோதி பஸ் டிரைவர் பலி
ADDED : ஆக 11, 2025 05:39 AM
கரூர்: கரூர் அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில் தனியார் பள்ளி பஸ் டிரைவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மணல்மேடு பகு-தியை சேர்ந்தவர் ரமேஷ், 50; தனியார் பள்ளி பஸ் டிரைவர். இவர், நேற்று முன்தினம், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த சங்கர ஆனந்தம், 41, என்பவருடன், 'யமஹா' பைக்கில், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை நாணப்பரப்பு பிரிவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கரூர் ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த சேகர், 64, என்பவர் ஓட்டிச்சென்ற, 'ஸ்விப்ட்' கார், பைக்கின் பின்புறம் மோதியது. இதில், கீழே விழுந்த ரமேஷ், கரூர் அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சங்கர ஆனந்தம் படுகாயம் அடைந்த நிலையில், கரூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேலாயுதம்பாளையம் போலீசார்
விசாரிக்கின்றனர்.