/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் பஸ் நிறுத்தம்; போக்குவரத்து நெரிசல்
/
சாலையில் பஸ் நிறுத்தம்; போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூலை 15, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
க.பரமத்தி: கரூர் - ஈரோடு சாலையில் நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
பெரும்பாலும், அந்த சாலை போக்கு-வரத்து மிகுந்ததாக உள்ள நிலையில், புன்னம் சத்திரம் பஸ் ஸ்டாப்பில், கடைகள், ஓட்டல்கள் அதிகளவில் உள்ளன. ஆனால், பஸ்களை டிரைவர்கள், ஸ்டாப்பில் நிறுத்தாமல் சாலையின் நடுவே நிறுத்தி, பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர். இதனால், குழந்தைகளுடன் வரும் பயணிகள், சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக, புன்னம் சத்திரம் பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையின் நடுவே பஸ்களை நிறுத்தும் டிரைவர்கள் மீது நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.