ADDED : ஆக 27, 2026 02:59 AM
கரூர்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், பாதுகாப்பு அலு-வலர், நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:
கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மிஷன் வத்-சல்யா சார்பில், பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு விண்-ணப்பிக்கலாம். இதற்கு, 42 வயதுக்கு மிகாமல், சமூக பணி, சமூகவியல், குழந்தை வளர்ச்சி, மனித உரிமைகள், பொது நிர்-வாகம், உளவியல், மனநல மருத்துவம், சட்டம், பொது சுகாதா-ரம, சமுதாய வள மேலாண்மை ஆகிய பாடப்பிரிவுகளில் முது-கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இளங்கலை பட்டம் பெற்று அதனுடன் பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி உள்பட பல்வேறு பணிகளில் இரண்டு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு, 27,804 ரூபாய் மாத தொகுப்பூதியம் வழங்கப்படும்.
மேலும், சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர் பணியி-டத்திற்கு, 42 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இளங்-கலை சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதற்கு, 27,804 ரூபாய் மாத தொகுப்பூதியம் வழங்கப்படும். விண்ணப்ப படி-வங்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட, 15 நாட்களுக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண், 55 முதல் தளம், கரூர் கலெக்டர் அலுவ-லக இணைப்பு கட்டடம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
