ADDED : ஆக 27, 2026 02:59 AM
அ நிறம் | அளவு
கரூர்: வரத்து குறைவால் சின்ன வெங்காயம், விலை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சின்ன வெங்காயம் பெரம்பலுார், அரியலுார், நாமக்கல், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக-ளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, பருவ மழை தவறி-யதால் சின்ன வெங்காயம் வரத்து, கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு குறைய தொடங்கியுள்ளது. இதனால், விலை அதிகரித்துள்ளது.கடந்த மாதம், ஒரு கிலோ சின்ன வெங்காயம், 40 முதல், 50 ரூபாய் வரை விற்றது. தற்போது, வரத்து குறைவால் ஒரு கிலோ, 70 முதல், 80 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
