/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீரர்களுக்கு ஓய்வூதியம:் விண்ணப்பிக்க அழைப்பு
/
வீரர்களுக்கு ஓய்வூதியம:் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 29, 2025 01:06 AM
கரூர், சர்வதேச, தேசிய போட்டிகளில் பங்கேற்ற, விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தை சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, 6,000 ரூபாய்- மாத ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். சர்வதேச, தேசிய போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவராகவும் இருத்தல் வேண்டும். முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி இல்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பிக்கங்களை, ஜூலை, 31 க்குள் கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சமர்பித்திட வேண்டும். மேலும் விபரங்களுக்கு 7401703493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.