/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முன்மாதிரியான சேவை விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
முன்மாதிரியான சேவை விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 01, 2025 01:25 AM
கரூர், முன்மாதிரியான சேவை விருது பெற, குழந்தை இல்லங்கள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு சமூகநலத்துறை சார்பில், முன்மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்படுகிறது. இதில், குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் -உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிக்க, இளைஞர் நீதிச்சட்டத்தின் கீழ், குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களை பதிவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து, 5 ஆண்டு காலம் செயல்பாட்டில் இயங்கி இருக்க வேண்டும். குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீதும் எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கரூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாக முழு அளவிலான கருத்துருவுடன் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.