/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பல்நோக்கு உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
/
பல்நோக்கு உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : நவ 06, 2025 01:02 AM
கரூர், சமூகநலத்துறையின் பல்நோக்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்ட சமூகநலத்துறையின் கீழ், சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில், பல்நோக்கு உதவியாளருக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பதவிக்கான மாதிரி விண்ணப்பம் கரூர் மாவட்ட இணையதளத்தில் https://karur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு, கரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர். 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும். மாத ஊதியம், 10,000 வழங்கப்படும். வரும், 21க்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், கரூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

