/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாதுகாப்பு அலுவலர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு
/
பாதுகாப்பு அலுவலர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜன 10, 2025 01:30 AM
பாதுகாப்பு அலுவலர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு
கரூர், : கரூர் மாவட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்பட்டு வருகிறது. இதில் புதியதாக பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) -பணியிடம் ஒன்று, சிறப்பு சிறார் காவல் அலகிற்கு, இரண்டு சமூகபணியாளார் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு, புதியதாக பாதுகாப்பு அலுவலர் தொகுப்பூதியம், 27,804 ரூபாய்- என்ற அடிப்படையில் வழங்கப்படும். சமூக பணியாளர் பணியிடம் தொகுப்பூதியம், 18,536 ரூபாய்- வழங்கப்படும்.
இந்த பணியிடங்களுக்கு, 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சமூகபணி, சமூகவியல், குழந்தை வளர்ச்சி, மனித உரிமைகள் பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும், 25 மாலை 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரம் பெற, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்: 13 சாமி காம்ப்ளக்ஸ், ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரில், கரூர் கலெக்டர் அலுவலக அஞ்சல், தொலைபேசி, 04324-296056 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.