/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நவீன சலவையகம் அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு
/
நவீன சலவையகம் அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : அக் 14, 2025 01:52 AM
கரூர், நவீன சலவையகம் அமைக்க, 5 லட்சம் ரூபாய் பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு பொருளாதார மேம்பாட்டிற்காகவும், நவீன சலவையகம் அமைக்க, 5 லட்சம் ரூபாய் வழங்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்தொழிலில் முன் அனுபவம் உள்ள, 5 நபர்கள் கொண்ட குழுவாக, கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் பெற்று கொள்ளலாம். இவை கலெக்டர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து தேர்வு செய்யப்படும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனாளி களின் ஆண்டு வருமானம்,
1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
மேலும், கூடுதல் விபரங்களுக்கு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்,