/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உளுந்து பண்ணை அமைக்க விதை சான்று உதவி இயக்குனர் அழைப்பு
/
உளுந்து பண்ணை அமைக்க விதை சான்று உதவி இயக்குனர் அழைப்பு
உளுந்து பண்ணை அமைக்க விதை சான்று உதவி இயக்குனர் அழைப்பு
உளுந்து பண்ணை அமைக்க விதை சான்று உதவி இயக்குனர் அழைப்பு
ADDED : மே 29, 2024 07:22 AM
கரூர் : கரூர் மாவட்டத்தில், உளுந்து பயிரில் விதை பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் உதவி விதை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என, விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் மணி மேகலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: குறுகிய காலத்தில், லாபம் தரக்கூடிய பயிரில் உளுந்து முதன்மையானது. 70 முதல், 80 நாட்களில் உளுந்து பயிர் விவசாயிகளுக்கு லாபம் தரும். உளுந்து விதைகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி, மானிய விலையில் விதைகளை பெற்றுக் கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு, எட்டு கிலோ வீதம், 30 சென்டி மீட்டருக்கு, 10 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைத்து, சதுர மீட்டருக்கு, 33 செடிகள் என்ற வகையில் பராமரிக்க வேண்டும். அதன் மூலம் ஏக்கருக்கு, 450 மூலம், 500 கிலோ வரை மகசூல் பெறலாம். எனவே, விதை பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் உதவி விதை அலுவலரை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.