/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு கலை கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
/
அரசு கலை கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : மே 09, 2024 06:28 AM
அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் வசந்தி பத்மநாபன், இளம் கலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உள்ள பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்சி., கணிதம் மற்றும் பி.எஸ்சி., கணினி அறிவியல் ஆகிய இளம் கலை பாடப்பிரிவுகளுக்கு, மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பத்தை வரும், 20ம் தேதிக்குள் பூர்த்தி செய்து, இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். மேலும் இணையதள வசதி இல்லாதவர்கள், இக்கல்லுாரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.