/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'பாதாள சாக்கடை மூடி இணைப்பு பகுதியில் சாலை அமைக்கலாமே'
/
'பாதாள சாக்கடை மூடி இணைப்பு பகுதியில் சாலை அமைக்கலாமே'
'பாதாள சாக்கடை மூடி இணைப்பு பகுதியில் சாலை அமைக்கலாமே'
'பாதாள சாக்கடை மூடி இணைப்பு பகுதியில் சாலை அமைக்கலாமே'
ADDED : செப் 21, 2025 01:15 AM
கரூர் :கரூரில், பாதாள சாக்டை மூடி இணைப்பு பகுதியில், தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்கள், பாதாள சாக்கடை திட்டத்தின், ராட்சத குழாய்களில் இணைக்கப்பட்டுள்ளது.
அந்த குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்படும் பட்சத்தில், அதை சரி செய்யும் விதத்தில், வட்ட வடிவில் மேல் பகுதியில் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களை, பாதாள சாக்கடை குழாயில் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
குழாய்களை இணைக்க, பள்ளம் தோண்டப்படும் இடங்களில், உடனடியாக தார்ச்சாலை அமைக்கப்படுவதில்லை.இதனால், கரூர் மாநகர பகுதிகளில், பல தெருக்களின் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதில், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து, விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, பாதாள சாக்கடை மூடி பகுதியில் தார்ச்சாலை அமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.