sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வட்டியில் மூலதன கடன் பெறலாம்'

/

வட்டியில் மூலதன கடன் பெறலாம்'

வட்டியில் மூலதன கடன் பெறலாம்'

வட்டியில் மூலதன கடன் பெறலாம்'


ADDED : நவ 05, 2024 01:30 AM

Google News

ADDED : நவ 05, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வட்டியில் மூலதன கடன் பெறலாம்'

கரூர், நவ. 5-

தாய்கோ வங்கி மூலம், குறைந்த வட்டியில் மூலதன கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு தொழில் கூட்டுறவு தாய்கோ வங்கியின், சிறப்பு திட்டமான கலைஞர்கடன் உதவி திட்டத்தின் கீழ், குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு, 7 சதவீதம் வட்டியில், 20 லட்சம் ரூபாய் வரை மூலதன கடன்கள் வழங்கப்பட உள்ளது. புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள், குறு உற்பத்தி நிறுவனத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் கடனுதவி பெறலாம். உரிமையாளர்களின் வயது 18 முதல் 65க்கு மிகாமல் இருக்க வேண்டும். புதிய தொழில் முனைவோர் மற்றும் ஏற்கனவே நிறுவனத்தாரராக இருப்பின், இரண்டு ஆண்டுகள் லாபத்தில் இயங்கும் நிறுவனங்களாகவும் இருக்க வேண்டும். கடன் உதவி பெற பிணைய சொத்தின் அளவு வங்கி யின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இத்திட்டத்தில் பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்கள், விதிமுறைக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றிக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கரூர் மற்றும் கிளை மேலாளர், தாய்கோ வங்கி, நெ.69, லைட்ஹவுஸ் கார்னர், கரூர் -639001 மற்றும் 04324 262636, 89258 14613, 86675 47964 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கரூர் மாவட்ட கலெக்டர்

தங்கவேல் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us