ADDED : பிப் 23, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை;குளித்தலை அடுத்த நெய்தலுார் பஞ்., பெரியபனையூரை சேர்ந்தவர் மணிகண்டன், 24.
சரக்கு வேன் டிரைவர். இவர் கடந்த, 10 மதியம், 1:00 மணிக்கு, 'டாடா ஈச்சர்' சரக்கு வாகனத்தில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு, சின்னபனையூர், வடக்குமேட்டில் சென்றுகொண்டிருந்த போது, மின்கம்பியில் வைக்கோல் உரசி தீப்பற்றி எரிந்தது. இதில், சரக்கு வேன் முழுவதும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து, டிரைவர் மணிகண்டன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.