/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாயியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
/
விவசாயியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ADDED : அக் 27, 2024 03:57 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த கல்லடை பஞ்சாயத்து பகுதியை சேர்ந்-தவர் நந்தகுமார், 23; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு தன் தோட்டத்திற்கு சென்றார். அப்போது, பாதிரிப்பட்டியை சேர்ந்த பழனி, 35, ரமேஷ், 30, ஆகிய இரு-வரும், சீத்த முள் மரத்தை வெட்டினர்.
அப்போது நந்தகுமார், 'ஏன் எங்கள் தோட்டத்தில் உள்ள மரங்-களை வெட்டுகிறீர்கள்' என கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில், நந்தகுமாரை, பழனி, ரமேஷ் ஆகிய இருவரும் தகாத வார்த்-தையால் பேசி, தாக்கினர். படுகாயமடைந்த நந்தகுமார், தோகை-மலை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இது-குறித்து நந்தகுமார் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.