/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'குடி'மகனுக்கு கொலை மிரட்டல் டாஸ்மாக் சேல்ஸ்மேன் மீது வழக்கு
/
'குடி'மகனுக்கு கொலை மிரட்டல் டாஸ்மாக் சேல்ஸ்மேன் மீது வழக்கு
'குடி'மகனுக்கு கொலை மிரட்டல் டாஸ்மாக் சேல்ஸ்மேன் மீது வழக்கு
'குடி'மகனுக்கு கொலை மிரட்டல் டாஸ்மாக் சேல்ஸ்மேன் மீது வழக்கு
ADDED : ஆக 03, 2024 01:10 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மனவாசி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டித்துரை, 33. இவர், கடந்த ஜூலை, 30 இரவு, 7:15 மணிக்கு, மாயனுார் டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றார். அப்போது, பாண்டித்துரை, தனக்கு பிடித்தமான மது வகைகளை கேட்டுள்ளார்.
அதற்கு, விற்பனையாளர், கள்ளப்பள்ளியை சேர்ந்த கண்ணன், 49, அந்த மதுவகை இல்லை என தெரிவித்துள்ளார். பின், வேறு ஒருவருக்கு, பாண்டித்துரை கேட்ட மது வகைகளை கொடுத்துள்ளார். இதை பார்த்த பாண்டித்துரை, விற்பனையாளரிடம் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த டாஸ்மாக் விற்பனையாளர் கண்ணன், மது பாட்டிலை உடைத்து, பாண்டித்துரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பாண்டித்துரை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து புகார்படி, மாயனுார் போலீசார், டாஸ்மாக் கடை விற்பனையாளர் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.