/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஸ்டேஷனில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றவரை வெட்டிய 5 பேர் மீது வழக்கு
/
ஸ்டேஷனில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றவரை வெட்டிய 5 பேர் மீது வழக்கு
ஸ்டேஷனில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றவரை வெட்டிய 5 பேர் மீது வழக்கு
ஸ்டேஷனில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றவரை வெட்டிய 5 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 11, 2025 05:43 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த கேப்பேட்டை பஞ்., புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ், 47; விவசாயி. இவர் கடந்த, 3ல், தனக்கு சொந்தமான காரில், கட்டளைமேட்டு வாய்க்கால் கரை, சீகம்பட்டி வழியாக சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, வீரக்குமாரன்பட்டியை சேர்ந்த பிரபா-கரன் மற்றும் இருவர், டூவீலரை நடுவழியில் நிறுத்தி, காருக்கு வழிவிடாமல் நின்றுகொண்டி-ருந்தனர். தர்மராஜ் தட்டிக்கேட்டதால், இரு தரப்-பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரபா-கரன் கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், தர்மராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தர்மராஜ், லாலாப்பேட்டை போலீசில், தினமும் காலை, 10:00 மணிக்கு கையெழுத்திட்டு வரவேண்டும் என, உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று காலை, போலீஸ் ஸ்டேஷன் வந்த தர்மராஜ், கையெழுத்திட்டார். பின், 11:00 மணிக்கு தன் டூவீ-லரில், லாலாப்பேட்டை-வீரவள்ளி நெடுஞ்-சாலை, வீரக்குமாரன்பட்டி அருகே சென்று-கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரை சேர்ந்த, ஐந்து பேர் டூவீலரை மறித்தனர். பின், மறைத்து எடுத்து வந்திருந்த அரிவாளால், தர்மராஜின் தலை, கைகளில் வெட்டிவிட்டு
தப்பினர்.
பலத்த காயமடைந்த தர்மராஜ், கரூர் அரசு மருத்-துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லாலாப்பேட்டை போலீசார், சம்பவம் தொடர்பாக, ஐந்து பேர் மீது வழக்குப்ப-திந்து விசாரித்து
வருகின்றனர்.

