ADDED : நவ 09, 2025 04:01 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த மணத்தட்டை பஞ்., எழுநுாற்று மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார், 30; இவர், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின், குளித்தலை ஒன்றிய செயலாள-ராக இருந்து வருகிறார். கடந்த, 5ல், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்-சாலையில், கடம்பர் கோவில் அருகே உள்ள டீக்கடையில், கட்-சியின் நிறுவன தலைவர் வக்கீல் பொன்.முருகேசன் மற்றும் கட்சி தொண்டர்கள் டீ குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கி-ருந்த கட்சியின் தொண்டர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுத்-துக்கொண்டிருந்தனர்.
அருகில், மது குடித்துக்கொண்டிருந்த கடையின் உரிமையாளர் மற்றும் ஆறு பேர் ஒன்று சேர்ந்து, தகாத வார்த்தையில் பேசி திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஒன்றிய செயலாளர் சிவக்குமார் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார், 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

