/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்கு
/
அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்கு
ADDED : ஜன 13, 2025 03:11 AM
கரூர்: கரூர் மாவட்டம், புலியூர் எஸ்.வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்-தவர் ரவிச்சந்திரன், 50; அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில ஒருங்-கிணைப்பாளர். இவர் கடந்த, 11ல் பயங்கர ஆயுதங்
களுடன் காரில் சுற்றி திரிந்ததாக கூறி, பசுபதிபாளையம் போலீசார் கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்துள்-ளனர்.
இந்நிலையில், கரூர் திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த சித்ரா தேவி, 40; என்பவர், அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ஆறு மாதங்களுக்கு முன், நிலம் விற்பதாக கூறி, ஆறு லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு, தர மறுப்பதாக போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, வெள்ளி-யணை போலீசார் ரவிச்சந்திரன் மீது, மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.