/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தம்பதியை கம்பியால் தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு
/
தம்பதியை கம்பியால் தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு
தம்பதியை கம்பியால் தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு
தம்பதியை கம்பியால் தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு
ADDED : நவ 22, 2025 02:24 AM
கரூர், கரூரில் முன்விரோதம் காரணமாக, கணவன், மனைவியை தாக்கிய, தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர், தெற்கு நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ், 62; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 47, என்பவருக்கும், சொத்து விஷயமாக முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த, 20ல் வீட்டில் இருந்த கனகராஜ், அவரது மனைவி செல்வி, 54, ஆகியோரை, முன் விரோதம் காரணமாக ஹரி கிருஷ்ணன், அவரது மகன் கவின், 25, ஆகிய இருவரும், இரும்பு கம்பியால் அடித்துள்ளனர். படுகாயமடைந்த கனகராஜ், செல்வி ஆகியோர், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கனகராஜ் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் ஹரிகிருஷ்ணன், கவின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.