/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துக்க நிகழ்வில் தகராறு தாக்கியவர் மீது வழக்கு
/
துக்க நிகழ்வில் தகராறு தாக்கியவர் மீது வழக்கு
ADDED : டிச 01, 2025 02:30 AM
குளித்தலை: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அடுத்த கீரிக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ், 28; டூவீலர் மெக்கானிக். இவரது உறவின-ரான, வடக்கு, கல்லுப்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்-பவர், கடந்த, 26ல் இறந்துவிட்டார்.
அவரது துக்க நிகழ்வுக்காக, தேவராஜ் மற்றும் அவரது உறவினர்கள் நிஷாந்த், 19, நாகராஜன், 20, ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது, தொண்டமாங்கினம் பஞ்., பெருமாள்கவுண்டம்பட்-டியை சேர்ந்த கந்த
சாமி என்பவர், முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தையில் பேசி, கத்தியால் கீரியும், அடித்தும் கொலை மிரட்டல் விடுத்-துள்ளார். பாதிக்கப்பட்ட தேவராஜ், நிஷாந்த், நாகராஜ் ஆகிய மூவரும், தோகைமலை தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தேவராஜ் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், கந்தசாமி மீது வழக்குப்ப-திந்து விசாரிக்கின்றனர்.

