/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை மறியலில் ஈடுபட்ட பா.ம.க.,வினர் மீது வழக்கு
/
சாலை மறியலில் ஈடுபட்ட பா.ம.க.,வினர் மீது வழக்கு
ADDED : ஜன 04, 2025 01:16 AM
கரூர், ஜன. 4-
கரூரில், சாலை மறியலில் ஈடுபட்ட, பா.ம.க.,வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலை கழக மாணவிக்கு ஏற்பட்ட, பாலியல் கொடுமையை கண்டித்து, நேற்று முன்தினம் பா.ம.க., மகளிர் அணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், ஈடுபட்ட பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா கைது செய்யப்பட்டார். அதை கண்டித்து, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே மாவட்ட பா.ம.க., செயலாளர் பாஸ்கரன் தலைமையில், அக்கட்சியினர் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் கொடுத்த புகாரின்படி, மாவட்ட பா.ம.க., செயலாளர் பாஸ்கரன், மகளிர் அணி அமைப்பாளர் தமிழினி உள்பட, பலர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

