/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாயிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மூவர் மீது வழக்கு
/
விவசாயிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மூவர் மீது வழக்கு
விவசாயிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மூவர் மீது வழக்கு
விவசாயிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மூவர் மீது வழக்கு
ADDED : அக் 18, 2024 03:06 AM
விவசாயிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மூவர் மீது வழக்கு
குளித்தலை, அக். 18-
குளித்தலை அடுத்த, சீக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 53, விவசாய கூலி தொழிலாளி. கடந்த, 16 காலை, 10:30 மணியளவில் அய்யர்மலை சிவாய பிரிவு ரோடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, நெய்தலுார் தெற்கு தெருவை சேர்ந்த மலர்கண்ணன், 54. கட்டணிமேடு சியாம்சுந்தர், 30, திருச்சி மாவட்டம் புலிவலம் குடித்தெருவை சேர்ந்த பிரசாந்த், 29, ஆகியோர் மது குடிப்பதற்கு பணம் கொடு என, கத்தியை காட்டி மிரட்டி ஆறுமுகம் பாக்கெட்டில் இருந்த, 2,000 ரூபாயை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பினர்.
ஆறுமுகம் கொடுத்த புகார் படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, சியாம் சுந்தரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.