/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டிப்பர் லாரியில் மணல் இருவர் மீது வழக்கு
/
டிப்பர் லாரியில் மணல் இருவர் மீது வழக்கு
ADDED : டிச 15, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், டிச. 15-
வேலாயுதம்பாளையம் அருகே, டிப்பர் லாரியில் அனுமதி இல்லாமல் மணல் கொண்டு சென்றதாக, இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் உள்ளிட்ட, போலீசார் நேற்று முன்தினம், கரூர் - சேலம் நெடுஞ்சாலை செக்குமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டிப்பர் லாரியில் அனுமதி இல்லாமல், ஒரு யூனிட் மணல் கொண்டு சென்றதாக, டிரைவர் மகேஷ் அருள், 42; பொக்லைன் ஆப்ரேட்டர் ராமச்சந்திரன், 40; ஆகியோர் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஜன., 3ல் ஓய்வூதியர்