/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் மீது வழக்குப்பதிவு
/
மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் மீது வழக்குப்பதிவு
மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் மீது வழக்குப்பதிவு
மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஜூன் 21, 2025 01:05 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலகம் முன், சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (தமிழ் செல்வி குரூப்) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம், மாவட்ட செயலாளர் சிங்கராயர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இது குறித்து, அனுமதி இல்லாமல் சாலை மறியலில் ஈடுபட்டதாக, போலீஸ் எஸ்.ஐ., சக்திவேல் புகார் செய்தார்.
இதையடுத்து, மாவட்ட செயலாளர் சிங்கராயர், நிர்வாகிகள் விஜயகுமார், தங்கராசு, மனோகரன் உள்பட, 46 பெண்கள் உள்பட, 57 பேர் மீது தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.