/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போலி அரசு ஆவணம் மூவர் மீது வழக்கு பதிவு
/
போலி அரசு ஆவணம் மூவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூலை 02, 2024 07:46 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, வீரராக்கியாம் பஞ்., நடரா-ஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி செல்வக்கனி, 51, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் லோகநாதனுக்கு, பொதுப்பணி துறையில் வேலை வாங்கி தருவ-தாக, 2017 நவ., 6ல் மணவாசி பஞ்., ஆர்.புதுக்-கோட்டையை சேர்ந்த சக்திவேல், 56, திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சந்திரசேகர், 55, கரூர் அரசு காலனி குமார் ஆகியோர், 14 லட்சத்து, 15 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து அவர்கள், போலியான அரசு பணி ஆணை தயாரித்து கொடுத்துள்ளனர். ஏமாற்றப்-பட்டதையடுத்து, பணத்தை திருப்பி கேட்டதற்கு மூவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட செல்வக்கனி, கரூர் எஸ்.பி.,யிடம் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.