தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மேம்பால பணிகளால் இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தல்

மேம்பால பணிகளால் இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தல்

மேம்பால பணிகளால் இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தல்


ADDED : பிப் 13, 2026 07:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 07:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, மேம்பால பணிகளால் இரவு நேரங்களில், வாகன ஓட்டிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், தடாகோவிலில் அரவக்குறிச்சி பிரிவு அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதையடுத்து தற்போது, அப்பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேம்பால பணிகளுக்காக, தற்காலிகமாக மாற்றுச்சாலை அமைக்கப்பட்டு, வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்படுகின்றன.

இதனால், தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் அரவக்குறிச்சியில் இருந்து நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் மாற்றுச்சாலை வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில், வாகனங்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். மேம்பாலம் பணிகள் நடைபெறும் பகுதிகளில், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்படாததால், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

பாலம் கட்டும் பகுதியின் இருபுறங்களிலும், கட்டுமான பணிகள் நடந்து வருவதால், இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், பாதை தெளிவாக தெரியாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே, மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில், போதிய மின் விளக்குகள் அமைப்பதுடன், இரவில் தெளிவாக தெரியும் தடுப்பு கட்டைகள், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இதன் மூலம் விபத்துகளை தவிர்த்து, வாகன போக்குவரத்து பாதுகாப்பாக நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us