காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு; வீணாகும் தண்ணீர்
காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு; வீணாகும் தண்ணீர்
ADDED : அக் 31, 2026 07:22 AM

குளித்தலை:குளித்தலை
அடுத்த வதியம் பஞ்., கீழக்குறப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து
கோட்டமேடு, அய்யர்மலை, தோகைமலை வழியாக, மணப்பாறைக்கு காவிரி கூட்டு
குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த
குழாய், 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இதனால் குழாய்
செல்லும் பாதையில், அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான
லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.இந்நிலையில் நேற்று காலை
கீழக்குறப்பாளையத்தில் உள்ள பரமசிவம் என்பவரின் வீட்டின்
முன்புறம், காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர்
பீய்ச்சி அடித்து வெளியேறியது. அப்போது, வீட்டின் முன்
கட்டுமானத்திற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல்கள் சிதறி
சாலையில் விழுந்தன.
மேலும் அருகில் இருந்த கடைகள், வீடுகளுக்குள்
தண்ணீர் புகுந்தது. லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது.
பின்னர், குடிநீர் வடிகால் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து,
குழாய் உடைப்பை சரிசெய்தனர்.
