/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கர்நாடகாவில் செயற்கையான நீர் தட்டுப்பாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் குற்றச்சாட்டு

ADDED : ஏப் 26, 2024 03:39 AM
கரூர்: தண்ணீர் தட்டுப்பாடு என, செயற்கையான பிரச்னையை ஏற்படுத்தி கர்நாடகா அரசு கபட நாடகமாடுகிறது என, காவிரி நீர் பாசன விவசாயிகள் நல சங்கத் தலைவர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:
கடந்தாண்டு மேட்டூர் அணை திறக்கும் போது கர்நாடக அணைகளில், 100 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தும், நமக்கு உரிய நீரை திறக்காததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. நடப்பாண்டில், ஜூன் 12-க்குள் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருமா என்பதே சந்தேகம்தான். காரணம் கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர் அணைக்கு மேல்பகுதியில், பல ஏரிகளை உருவாக்கி, அங்கு காவிரி நீரை மடைமாற்றம் செய்துள்ளது. ஆனால் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக செயற்கையாக பிரச்னையை உருவாக்கி, தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காமல் கபட நாடகம் ஆடுகிறது.
விவசாயிகளின் விளை பொருள்களுக்கு, ஆதார விலை கிடைக்கவில்லை என்று பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் புதுடில்லியை முடக்கியது போன்று, மேகாதாது அணை கட்ட முயலும் கர்நாடகத்தை கண்டித்து, தமிழக விவசாயிகளும் அறப்பேராட்டத்தில் ஈடுபட்டு, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.