ADDED : டிச 29, 2025 07:32 AM
கரூர்; கரூர், வேலுசாமிபுரத்தில், கடந்த செப்., 27ல் நடந்த, த.வெ.க., பிரசார கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்ற உத்தர-வுப்படி, சி.பி.ஐ.,- எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் கரூர் கலெக்டர் அலு-வலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, சுற்றுலா மாளிகையில் விசாரித்து வருகின்றனர்.த.வெ.க., பிரசார கூட்டம் நடந்த வேலுசாமிபுரம் பகுதியில், கடந்த செப்., 27ல் பாதுகாப்பு பணியில் இருந்த, இரண்டு போலீசாரிடம் நேற்று மதியம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, நாமக்கல்லில் இருந்து, த.வெ.க., தலைவர் விஜய் எத்தனை மணிக்கு, பிரசார கூட்டம் நடந்த இடத்துக்கு வந்தார் உள்ளிட்ட பல்-வேறு கேள்விகளை, சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்டு விசாரித்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு பிறகு, இரண்டு போலீசாரும் புறப்பட்டு சென்றனர்.

