/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒன்றறை மணி நேரம் சி.பி.ஐ., விசாரணை
/
கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒன்றறை மணி நேரம் சி.பி.ஐ., விசாரணை
கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒன்றறை மணி நேரம் சி.பி.ஐ., விசாரணை
கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒன்றறை மணி நேரம் சி.பி.ஐ., விசாரணை
ADDED : அக் 31, 2025 03:27 AM
கரூர்:  கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம், ஒன்றறை மணி நேரம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்., 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இக்குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் அக். 17ல் கரூர் வந்து, கலெக்டர் அலுவலக வளாக பயணியர் மாளிகையில் தங்கியுள்ளனர். இவர்கள், தமிழக சிறப்பு புலனாய்வு குழுவிடம் பெறப்பட்ட ஆவணங்கள், வாக்கு மூலங்களை வைத்து  கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்., 22ல் சி.பி.ஐ., போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சி.பி.ஐ., தரப்பில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை கரூர் ஜே.எம்., - 1 நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதில் கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் மதியழகன், மாநில பொதுச்செயலர் புஸ்சி ஆனந்த், துணை செயலர் நிர்மல்குமார் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
த.வெ.க., பிரசார கூட்ட நெரிசல் தொடர்பாக, முதலில் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், எப்.ஐ.ஆர்., பதிவு செய்தார்.
அதில் மேற்கு மாவட்ட, த.வெ.க., செயலர் மதியழகன், பொதுச் செயலர் ஆனந்த், துணை பொதுச்செயலர் நிர்மல் குமார் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தார். அதில் மேற்கு மாவட்ட, த.வெ.க., செயலர் மதியழகன் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமின் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கரூர் கலெக்டர் அலுவலக வளாக பயணியர் மாளிகைக்கு நேற்று மதியம், 2:28 மணிக்கு, கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆவணங்களுடன் வந்தார். அவரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஒன்றறை மணி நேரம் விசாரணை நடத்தினர்.

