/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிமென்ட் சிலாப்கள் உடைந்து பள்ளம் மருத்துவமனை வருவோர் கடும் அவதி
/
சிமென்ட் சிலாப்கள் உடைந்து பள்ளம் மருத்துவமனை வருவோர் கடும் அவதி
சிமென்ட் சிலாப்கள் உடைந்து பள்ளம் மருத்துவமனை வருவோர் கடும் அவதி
சிமென்ட் சிலாப்கள் உடைந்து பள்ளம் மருத்துவமனை வருவோர் கடும் அவதி
ADDED : டிச 13, 2025 05:10 AM
கிருஷ்ணராயபுரம்:கோவக்குளம், அரசு மருத்துவமனை முன்புறம் உள்ள பாலம் உடைந்து சேதம் ஏற்பட்டு பள்ளமாக மாறி விட்டதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம் கிராமத்தில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. தினமும், 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனை உள்ளே செல்லும் போது, கேட் வெளிப்புறத்தில் சிறிய சாக்கடை கால்வாய் செல்கிறது. கால்வாய் மேல்புற பகுதி களில் உள்ள, சிமென்ட் சிலாப்கள் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பெரிய வாகனங்கள் செல்லும் போது சிரமம் ஏற்படுகிறது. எனவே, மோசமான நிலையில் உள்ள சிமென்ட் சிலாப்புகளை, சரி செய்ய டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.