ADDED : ஜூலை 15, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்,:கிருஷ்ணராயபுரம் மற்றும் பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்.,ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 குறித்து பயிற்சி, நேற்று காலை கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
இப்பயிற்சி இன்றும் நடக்கிறது. அதில், வீட்டு பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பு குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ், ஆய்வு செய்தார். கரூர் மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பில், 40க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
