ADDED : ஜூலை 15, 2026 06:42 AM
அ நிறம் | அளவு
கரூர்: சேலம் மாவட்டம், ஓமலுார் கத்திமாரன் வலசுவை சேர்ந்தவர் மஞ்சு, 33. இவரது மனைவி அனிதா, 25. தம்பதிக்கு ஹர்வித், 8, வேலன், 5, என, இரண்டு மகன்கள்.
மஞ்சு, குடும்பத்துடன், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் தங்கி, கல் குவாரியில் வேலை செய்தார்.
நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினர் நால்வரும், டூ - வீலரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே முன்னால் சென்ற லாரி மீது டூ - வீலர் மோதியது.
இதில், படுகாயமடைந்த மஞ்சு, ஹர்வித் உயிரிழந்தனர். அனிதா, வேலன் இருவரும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
